சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தனியார் உணவகத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவிக்கு புங்கவாடி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அங்குராஜ் (32) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலையில் இருதரப்பையும் போலீசார் அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குராஜ் புங்கவாடி பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த கருப்பையா அங்குராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதுதிடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கு ராஜை குத்த முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த இருசக்கர வாகன பழுது நீக்க கடைக்கு தப்பியோடி ஒளிந்து கொண்டார் விடாமல் துரத்திய கருப்பையா கடையில் புகுந்து கத்தியால் குத்தியுள்ளார்.
அப்பகுதி பொதுமக்கள் கருப்பையாவை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த அங்கு ராஜ் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.