சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமி 12 சிறுமி மற்றும் சிறுமியின் உறவினர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி இருவரும் கடந்த 7- தேதி வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சிறுமியை தனிப்படை போலீசார் மீட்டனர். விசாரணையில் ஆத்தூர் அலெக்சாண்டர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் மாரிமுத்து ரோடு பகுதியை சேர்ந்த கௌதம் ஆகிய இரண்டு இளைஞர்களும் சிறுமிகளை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் மணிகண்டன் கௌதம் இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.