ஆத்தூர் வேளாண் சங்கத்தி ல் ரூ. 3. 48கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

55பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 831 விவசாயிகள் 4, 491 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 17 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.
இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 13, 169 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 16, 699 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 10, 989ரூபாய்க்கும் அதிகபட்சமாக 13, 699 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 23, 589 அதி பட்சமாக 26, 389 ரூபாய் விலை போனது. 4491 மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 2634. 76 மூலம் ரூ. 3கோடியே 48 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி