சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி இவரது மகள் பானுப்பிரியா இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் நோக்கி சென்றனர். சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நிகழ்வு இடத்திலேயே கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பானுப்பிரியாவை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இப்பகுதியில் போதிய மின்விளக்குகள், சிக்னல்கள் இல்லாததாலும், சர்வீஸ் சாலை அமைக்கப்படாததாலும் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கிருஷ்ணவேணியில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை விபத்தில் மகள் கண்முன்னே தாய் உயிரிழந்தது அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.