சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆத்தூர் அருகே சிவகுரு தெரு, தெற்கு உடையார்பாளையம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (டிசம்பர் 25) போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில் லாட்டரி மற்றும் குட்கா விற்பனை செய்ததது தெரியவந்தது.
இதனை எடுத்து காதர் செரிப் மகன் அஜ்மல் செரிப், கிருஷ்ணன் மகன் அருள் குமார், குழந்தைவேல் மகன் கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.