ஆத்தூர் அருகே கோரிக்கை பேனரால் பரபரப்பு

640பார்த்தது
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் காலனியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா, விவசாய நில பட்டா, வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு வசதி உள்ளிட்டவைகளை கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததால் கோரிக்கையை பேனராக அடித்து அப்பகுதி மக்கள் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி