சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு இறந்தவர்கள் உடலை எடுத்து செல்ல சரியான பாதைகள் இல்லாததால் காலம் காலமாக விவசாய நிலத்தில் எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் நிலை மாறுமா? மண்ணாய்க்கன்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஐந்து கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதியில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய பல கிலோமீட்டர் தூரம் அமரர் ஊர்தியில் எடுத்துச் சென்று
மண்ணாய்க்கம்பட்டி ஊர் எல்லையில் அமைந்துள்ள மயானத்திற்கு கை தாங்கலாக அல்லது பூந்தேர் ஏற்பாடு செய்திருந்தால் அதனைக் கொண்டு சரியான பாதை வலி இல்லாததால் தடுமாறிக் கொண்டே மிகவும் சிரமத்துக்கு உட்பட்டு உடல் அடக்கம் செய்ய மயானத்திற்கு வயல் வலியில் தள்ளாடி கொண்டு செல்கின்றனர். இறந்த உடலை எடுத்துச் செல்ல பஞ்சாயத்துக்கு சொந்தமான 4 அடி தடம் மட்டும் உள்ளதால் இதில் செல்வது மிகவும் சிரமம் பட்டு எடுத்துச் சென்று வருகின்றனர் பாதைகளை அகலப்படுத்தி தர வேண்டும் அல்லது மாற்று வழிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் இதற்கு விடிவுகாலம் பிறக்குமா? என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இறந்தவர்களை அடக்கம் செய்ய எடுத்து செல்ல வழியில்லாமல் தவிக்கும் கிராம மக்கள்.