சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சிங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் நில அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும், கணினி பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.