ஓட்டுநர்களின் காலில் விழுந்த லாரி உரிமையாளர்

74பார்த்தது
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையோட்டி பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடை, வீடு உள்ளிட்டவைகளில் உட்பட வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான 10 லாரிகள் உள்ளது இவரிடம் 25 பேர் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் லாரிகளுக்கு பூஜை செய்து ஓட்டுநர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்குவது விஜயகுமாரின் வழக்கம். இந்தாண்டு விஜயகுமார் ஓட்டுநர்கள் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார் அப்போது ஓட்டுநர்களுக்கு பரிசுகளை வழங்கிய விஜயகுமார் திடீரென தங்களால் தான் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதாக ஓட்டுனர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஒரே லாரியோடு தொடங்கிய தங்களது பயணம் தற்போது 10 லாரிகள் 25 ஓட்டுநர்களோடு உயர்ந்த நிலைக்கு அடைந்திருப்பதாகவும் அதற்கு தங்களின் உழைப்புதான் காரணம் என காலில் விழுந்து ஆசி பெற்றார். இது ஓட்டுனர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி