சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து பள்ளிக்கு சென்று வருகின்றார் இது குறித்த செய்தி வைரலானது.
இதனைத் தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் தனது X பக்கத்தில் மாணவர் அபிஷேக் அவர்களை பாராட்டி அரசு பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்றும் தொடர்ந்து மாணவனிடம் பேசிய அமைச்சர் பெருமையாக இருக்கின்றது. அறிவியலின் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ்கின்றீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் தெரிவித்தால் அதை நடைமுறை செய்யலாம் எனவும் மாண்புமிகு அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அபிஷேக்கிடம் தெரிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.