சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற திமுக தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 71 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதற்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் நன்றி தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஒருவர் கூட பாராட்டு தெரிவிக்காதது அக்கட்சியினர் இடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நகர மன்ற தலைவர் பெரும்பான்மை திமுக நகரமன்ற உறுப்பினர்கள் உள்ள நகரமன்ற கூட்டத்தில் துணை முதலமைச்சராகவும், சேலம் மாவட்ட புதிய அமைச்சராகவும் பொறுப்பேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்து திமுகவினர்.