ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

62பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ. 82. 10 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதில் ஆத்து ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ரூ. 9. 2 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாண்டவராயபுரம் ஊராட்சியில் நியாய விலை கடை முதல் உடையார் காடு வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார், பின்னர் ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார், இதே போல் தென்னங்குடி பாளையம் ஊராட்சியில் வசிஷ்ட நதியின் குறுக்கே நரசிங்கபுரம் முதல் தென்னங்குடி பாளையம் சாலை வரை கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணியையும் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி