ஆத்தூர் உழவர் சந்தையின் 26- ஆவது ஆண்டு தொடக்க விழா

76பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் அமைந்துள்ள உழவர் சந்தையின் 26- ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் விவசாயிகள் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று 26 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கேக் வெட்டி அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் உழவர் சந்தை சார்பாக இலவச மருத்துவ முகாமினையும் ஆத்தூர் வட்டார ஆத்மா குழு தலைவர் டாக்டர். செழியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் உழவர் சந்தை வேளாண் அலுவலர் ஸ்ரீதேவி, உதவி வேளாண் அலுவலர்கள் இளவரசன், செல்வகுமார், முன்னாள் வேளாண் அலுவலர் கருணாநிதி, முன்னோடி விவசாயிகள் செந்தில்குமார், சிவாஜி, ராஜேந்திரன், சேகர், சண்முகம், பூக்கடை ராஜா, கமால் பாஷா, சேட்டு, கருணாநிதி, மோகன்ராஜ், சுரேஷ் உள்ளிட்ட விவசாய பெருங்குடி மக்களும், நுகர்வோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாய பெருங்குடி மக்களுக்கும் நுகர்வோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி