சர்வோதய சங்க பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

80பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் கைவினைப் பொருட்கள், கதர் ஆடை, உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இதில் 20 க்கும் மேற்பட்டோர் பணியாளர்களாகவும், 200 க்கும் மேறபட்ட தனியார் தொழிலாளர்களாகவும், பணியாற்றி வந்த நிலையில் சங்கத்தின் பாரம்பரிய சொத்துக்களை சங்கத்தில் முன்னாள் நிர்வாகத்தினர் பெற்ற கடனுக்காக தனியார் வங்கியில் (கரூர் வைஸ்யா வங்கி) முறையாக வட்டி தொகை செலுத்தாததால் தற்போது மின் ஏல முறையில் ஏலம் விட முடிவு செய்துள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் சங்க வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி