ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் 5 மணிநேரம் நடைபெற்ற சோதனை நிறைவு

65பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் தென்னங்குடி பாளையத்தில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று(செப்.23) மாலை 4 மணியளவில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ் பி கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்தனர்.

கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மட்டும் பறிமுதல் செய்தனர். மேலும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

தொடர்புடைய செய்தி