ஆத்தூர் அருகே சாலை வேண்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி, ஜங்கமா சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்டசேரடி மலைப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதனை சீரமைக்க கோரி அவ்வழியாக வந்த அரசு பேருந்து மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200 மீட்டர் கடப்பதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக இருப்பதாகவும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.