ஆத்தூர் அருகே கருமந்துறையில் கோயிலில் 50 பவுன் நகை, உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை நவம்பட்டு கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீதைலம்மாள் கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கோயிலில் இருந்த உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்து 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து கருமந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.