ஆத்தூரில் பாமக 10. 5% இட ஒதுக்கீடு கண்டன ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். அப்போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு 10. 5 சதவீதம் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கி, 1000 நாட்களுக்கு மேலாகியும், தமிழக அரசு அதற்கான உத்தரவு பிறப்பிக்காமல் உள்ளது. திமுக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்து வருகிறது. வன்னியர்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கோஷம் எழுப்பினர் இதில் சேலம் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி