சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பகுதியில் பைத்தூர் செல்லும் சாலையில் ஏஎம்சி காலனி அமைந்துள்ளது இந்நிலையில் ஏ. எம். சி. , காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலையில் கழிவு நீர் செல்கிறது மேலும் குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறு கீழே விழும் சூழல் நிலவுவதால் சாலையை சீரமைக்க வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மை நலக்குழு உறுப்பினருமான தேவேந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பைத்தூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சீருடை இல்லாமல் வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவசக்தி என்பவர் நகரமன்ற உறுப்பினர் தேவேந்திரனை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார். அப்போது தேவேந்திரனுடன் வந்த வழக்கறிஞர் ஒருவரையும் காவல் உதவி ஆய்வாளர் யாரிடம் பேசுகிறாய் என தெரிந்து பேசின மிரட்டினார். மேலும் தேவேந்திரனை எதற்காக இப்படி தூக்கி வந்தீர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் யார் பொறுப்பு என காவல் உதவி ஆய்வாளர் சிவ சக்தியிடம் கேள்வி எழுப்பினார் அவருக்கு காவல் உதவி ஆய்வாளர் பொதுவாழ்வு என்றால் எல்லாம் வரும் என தெரிவித்தார்.