வீரகனூர் ஏரியில் பாக்கெட் சாராயம் விற்பனை அமோகம்

288பார்த்தது
வீரகனூர் ஏரியில் பாக்கெட் சாராயம் விற்பனை அமோகம்
தலைவாசலை அடுத்த வீரகனூர் ஏரி புதர்களால் சூழப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அந்த பகுதியில் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வீரகனூர் ஏரிக்கரையில் ஒருவர் பாக் கெட் சாராயத்தை மும்முரமாக விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் பலரும் சாராயத்தை வாங்கி சென்றனர். அப்போது ஒருவர் 10-க்கும் மேற் பட்ட பாக்கெட் சாராயத்தை வாங்கி, அதனை தனது லுங்கியில் போட்டு மடித்து கொண்டு சென்றார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங் களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், வீரகனூர் பகுதி பெரம்பலூர், கடலூர் மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து சிலர், மோட்டார் சைக்கிளில் வந்து, சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிலர் பாக்கெட் சாரா யத்தை வீடுகளுக்கு 'டோர் டெலிவரி' செய்கின்றனர். சாராயம் குடித்து பலர் இறந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடப்பதற்கு முன்பு போலீசார் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி