ஒரே நாளில்21மருத்துவ கட்டிடம்திறப்பதுமுதல்முறைஅமைச்சர்பேச்சு

64பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தொடர்ந்து ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக ரூ. 1. 95 மதிப்பிலான துணை சுகாதார நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தார். பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியம் ; சேலத்தில் ஒரே நாளில் 21 மருத்துவ கட்டிடங்கள் திறப்பது இதுவே முதல் முறை என்றும் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் ஒரு கோடியே 96 லட்சம் பயனாளிகள் உள்ளனர். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவத்தில் ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், கண் கண்ணாடி உள்ளிட்டவைகளையும் வழங்கினார் இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி