நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகர் பகுதியில் பொதுமக்கள் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாகவும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் வடக்கு தில்லைநகர் பகுதியில்பொதுமக்கள் சிலர் திறந்தவெளிதிறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் கூறி இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தால் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என இளைஞர் சுரேஷ் சேலம் ஆத்தூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டார். தொடர்ந்து அதிகாரிகள் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.