நகராட்சி பணிகளை செய்யாதஅதிகாரிகள்பதவி ராஜினாமாசெய்ய வேண்டும்

70பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. திமுக-வை நகர்மன்ற தலைவர் நிர்மலாபபிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீர் சாலை மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கான 71 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து பேசிய திமுக நகர மன்ற உறுப்பினர் தங்கவேலு நகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றால் மட்டும் போதாது பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் தமிழக முதல்வர் மக்களுக்கு சேவை செய்யவே வந்திருப்பதாக தெரிவித்துள்ளார் எனவே பணிகளை செய்யாத யாராக இருந்தாலும் பதவியை ராஜினாமா செய்து விட்டு போங்கள் என ஆவேசத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக நகர மன்ற உறுப்பினர் உமாசங்கரி, ஆத்தூர் நகர பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிவதாகவும் இதனால் இருசக்கர வாகனத்தில் பயணிப்போம் அச்சத்தோடு பயணிப்பதாகவும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் மேலும் வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் சாக்கடையில்அதிக அளவில் அட்டைப்புழு தேங்கி இருப்பதாகவும் எனது வீட்டின் பகுதியிலேயே அதிக அளவில் இருப்பதாகவும் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி