சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் பாளையம் கிராமத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வேளாண்மை துறை சார்பில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டது இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு திறந்து வைத்தார் மேலும் அலுவலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பயிற்சிக்காக வந்திருந்த தனியார் வேளாண் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.