ஆத்தூர் நகர மன்ற கூட்டம் மன்மோகன் சிங் மெளன அஞ்சலி

59பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர்மன்ற கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 23 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கூட்டம் தொடங்கியவுடன் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய திமுக நகர மன்ற உறுப்பினர் தங்கவேலு. சட்டமேதை அண்ணன் அம்பேத்கர் அவர்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தரக்குறைவாக பேசியிருக்கிறார் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் சீனாவுக்கு ஓடிவிட வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் அதிமுக நிர்வாகிகள் சொன்னால் கேட்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடநேரிடும்தெரிவித்தார். திமுக நகர மன்ற உறுப்பினர் சங்கர் எனது வார்டு பகுதியில் தெரு நாய்கள் தொல்லைஅதிகரித்திருப்பதாகவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமலும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாலும் சலசலப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி