துலுக்கனூர் - ஆனைக்கல் மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா நேற்று (ஜூன் 6) வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினைக்காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். கோயில் முழுவதும் மக்கள் வெள்ளமாக சூழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.