சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தம்பாடி பகுதியில் ஜெம் கேட்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நேற்று மேளதாளம் முழங்க சீர்வரிசை உடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை. ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று மேளதாளம் முழங்க சீர்வரிசை தட்டு செங்கரும்பு மண்பானை, பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை உடன் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாகச் சென்று கல்லூரியில் இலை தோரணம் கட்டி புது பானையில் பொங்கலிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு வைத்து விமர்சையாக கொண்டாடினர்.
கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு கொண்டாடினர்கள். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், ஆட்டம், பாட்டம், உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும்நடைபெற்றது.