சேலம்: ஜனவரி 17ல் ஜல்லிக்கட்டு விழா

60பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அளவில் விழாவிற்கான கால்கோல் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் செழியன், விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாடிவாசல், தடுப்பு கட்டைகள், காளைகள் வரும் வழி உள்ளிட்டவைகளை அமைக்கும் இடத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி