சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட உலிபுரம் ஊராட்சியில் நேற்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் மாடுகளை அவிழ்த்து விட்டார். 300 மாடு பிடி வீரர்களும் 700 மாடுகளும் நிகழ்வில் கலந்து கொண்டன.