தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் மு. க.
ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவில் அட்மா குழு தலைவர் சாத்தப்பாடி மணி என்ற பழனிசாமி குத்துவி ளக்கு ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முருக வேல் தலைமை தாங்கினார். முன்னாள் எம். எல். ஏ. குணசேக ரன் வரவேற்றார்.
விழாவில் ஊராட்சி தலைவர் அசோக், ஒன்றிய ஆணையாளர் துரைசாமி, வட்டார கல்வி அலுவலர் சந்திரிகா, வடக்கு ஒன் றிய தி. மு. க. செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் வரகூர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.