ஏற்காடு: தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

75பார்த்தது
ஏற்காடு: தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றுடன் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாரல் மழை, பனிப்பொழிவு, கடுங்குளிர் என மாறி, மாறி நிலவி வரும் சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று(அக்.12) ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகளிலும், பல்வேறு நிறுவனங்களிலும் காலையில் பூஜை செய்ததால் நேற்று முன்தினம்(அக்.11) ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட் போன்ற பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றி பார்த்து ரசித்தனர்.

மேலும், படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் காத்திருந்த படகு சவாரி செய்து உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். அதேசமயம், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி