சேலம் மாவட்டம், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று (செப்.,24) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென சுரைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம், கொத்தம்பாடி, கல்பகனூர், தென்னங்குடி பாளையம், அம்மம்பாளையம், மஞ்சினி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.