சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமம் கல்ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சி வனத்துறையின் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டு வருகின்றனர். சேலம் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் அசாம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.