சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள இறை இறக்கத்தின் இயேசு திருத்தலத்தில் உலகிலே மிக உயரமான 65 அடி ஏசு திருவுருவம் அமைந்துள்ள உள்ள வளாகத்தில் குழந்தை இயேசு பிறப்பை எடுத்துரைக்கும் விதமாக குடில் அமைத்து அதில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து காட்சியளித்தது. ஆலய வளாகத்தில் மணிப்பூர் கலவரம் கேரளா நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரார்த்தனை செய்யும் விதமாக தத்துரூபமாக நிலச்சரிவு பாதிப்பு மணிப்பூர் கலவரத்தை குறிக்கும் வண்ணம் குடில் அமைத்து பிரார்த்தனையும் நடைபெற்றது.
இரவு 12 மணிக்கு தொடங்கிய சிறப்பு பாடல் கிறிஸ்மஸ் பெருவிழா மிகச் சிறப்பாக பங்குத்தந்தை ஜெயசீலன் தலைமையில் கிறிஸ்துமஸ் பெரு விழா திருப்பலியை நிறைவேற்றி ஆலய வளாகத்தில் உள்ள கிறிஸ்மஸ் குடில் மந்திரித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை கிறிஸ்துவ மக்களுக்கு தெரிவித்தனர்.