சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஜூன் 5) உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைத்தனர்.