சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், வரும் 27ம் தேதி மாலை 3 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத் தில், மார்ச் ம் தேதிமுதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்தும், நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டங் கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள், கட்சி ஆக்கப்பணி கள் குறித்து ஆலோசிக்கப் பட உள்ளது.
மேலும் கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர் கள், நிர்வாகிகள், முன்னாள், இன்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் கள், தலைமை கழக செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள், தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தின் துணை அமைப்புகளான அணிகளின் மாநிலதுணை அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், துணை தலை வர்கள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப் பாளர்கள், வாக்குசாவடி முகவர்கள், முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.