சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இன்று (ஜூன் 8) வைகாசி மாதம் வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
இதில் திருமணத்திற்காக பாய் போடுவதில் மணமக்களின் பெற்றோர்கள் இடையே போட்டி போட்டுக்கொண்டு தகராறு ஏற்பட்டது. பின்பு கைகலப்பாக மாறியது, இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
முகூர்த்த தேதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு பதிவு செய்யப்படும் நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் செயலாளர் கஸ்தூரி எந்த ஒரு முன் ஏற்பாடும் செய்யாததால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக பொதுமக்கள் பரபரப்பான குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு வந்த வாகனங்களால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.