நகராட்சிஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

81பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் ஒப்பந்த தூய்மை பணியாளராக 117 பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மழைக்காலத்தில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களான மழைக்கோட், கையுறை,
முககவசம், உள்ளிட்டவை வழங்கப்படாமல் உள்ளதாகவும், இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தூய்மைப்படுத்த செல்லும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு மழைக்கால பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு முறையான சம்பளம் வழங்க வேண்டும் மழைக்கால பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், பழுதடைந்த பேட்டரி வாகனங்களை சீரமைத்து தர வேண்டும் எனவும், 13 பேட்டரி வாகனங்களுக்கு ஒரு சார்ஜர் மட்டும் உள்ளதாகவும், பேட்டரி வாகனங்கள் முறையாக சீரமைக்காததால் நேற்று ஒப்பந்த தூய்மை பணியாளர் பேட்டரி வாகனத்திற்கு சார்ஜர் போடும் பொழுது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து அரசு சிகிச்சை பெற்று வருவதாகவும், தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதம் நிகழும் முன்னரே ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி