பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வாய்ந்த மாதமான ஆண்டு தோறும் வரும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனி கிழமைகளிலும் விரதம் இருந்து சனிக்கிழமை தோறும் பெருமாளை தரசித்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
இதனையடுத்து புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 28(செப்)சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் மாயவன்மலை மேல் இரண்டாயிரம்அடி உயரத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ கொப்புக்கொண்ட பெருமாளுக்கு புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை ஒட்டி பெருமாளை தரிசனம் செய்வதற்காக உள்ளூர் முதல் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.
இரண்டாம் சனிக்கிழமையை ஒட்டி நள்ளிரவு 12 மணி முதலே சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாரதனை மற்றும் பச்சரிசி பொங்கல் படையலிட்டு பூஜைகள் தொடங்கிய நிலையில் பக்தர்கள் அதிகாலையிலேயே ஆண்கள் பெண்கள் என அனைவரும் கோவிலுக்கு வரத்தொடங்கினர் மேலும் இங்கு வரும் பக்தர்கள் மலைமேல் 1860 படிகட்டில் ஏரி நேர்த்திக்கடனை தீர்க்க ஆண்கள் குழந்தைகள் மொட்டை அடித்தும் பெண்கள் கோவிலில் வளாகத்தில் விளக்கேற்றியும், கொப்புக்கொண்ட பெருமாள் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த பின்னர் பக்தர்கள் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து
கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.