சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் திமுக பேச்சாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவலிங்கம் பேசும்பொழுது ; பல்வேறு நாடுகளில் தமிழர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து அதிகளவில்வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் வட மாநிலங்களில் அவ்வாறு இல்லை ஏனென்றால் அங்குபொருளாதரமும் இல்லை வளர்ச்சியும் இல்லை. மத்திய அமைச்சர் தர்ம தேர பிறந்தான் நாவடக்கம் இல்லாமல் பேசுகிறார் நான் பகிரமாக பேசி சொல்கிறேன் தமிழர்களை ஒன்றும் புடுங்க முடியாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தொடர்ந்து தமிழ்நாடு வெல்லும் என உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்மேடையில் தொடர்ந்து 11 மணி நேரம் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த மாணவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.