ஒப்பந்த தூய்மை பணியாளர் மின்சாரம் பாய்ந்ததில் படுகாய்ம்

84பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு மாதாகோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் ஸ்ரீ தர் (35). இவர் ஆத்தூர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
அம்பேத்கர் நகர் குப்பை கிடங்கில் உள்ள பகுதியில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்திற்கு ‘சார்ஜ்’ போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இடது கையில் ஒயரை பிடித்திருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி