சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மன்னாய்க்கன்பட்டி கிராமத்தில் ரேஷன் கடையில் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று புதன்கிழமை மதியம் பணியிலிருந்த சசிகுமாரிடம் அதே பகுதி சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்ப அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை வழங்குமாறும், அவரே அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருளை அவரே எடுத்துசெல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது இது குறித்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர் சசிகுமாரை தாக்கியதாக செந்தில்குமார் என்பவர் மீது வாழப்பாடி காவல் நிலையத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ரேஷன் கடை ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அதேபோல ரேஷன்கடை ஊழியர் சசிகுமார் தன்னை தாக்கியதாக செந்தில்குமாரும் வாழப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார். சம்பாத்தாள் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது