உலகமெங்கும் கிறிஸ்துவ பெருமக்கள் குழந்தை இயேசு பிறப்பு விழாவை கிறிஸ்மஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர் அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெய ராகினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக தேவாலயம் பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு 12 மணியளவில் அருட்தந்தை அருளப்பன் அவர்களால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதன் பின்னர் குழந்தை இயேசு மாட்டுத்தழுவத்தில் பிறந்த காட்சியை தத்ரூபமாக உயிரோடு உள்ள ஆடு, மாடு கோழி ஆகியவற்றை வைத்து குடில் அமைத்து இருந்தனர். இந்த சிறப்பு பூஜையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இயேசு கிறிஸ்துவை பிறப்பை சிறப்பாக கொண்டாட வேண்டும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் இயேசு கிறிஸ்துவின் குழந்தை இயேசுவை கிறிஸ்துவ பெருமக்கள் வழிபட்டுச் சென்றனர் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது