சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. திட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வி. கணேசன் துவக்கி வைத்தார். அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று பொதுமக்களுக்கு தேவையான உடனடியாக வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.