உலக சமாதானம் வலியுறுத்தி அசோகர் சிலை ரத யாத்திரை

71பார்த்தது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா, நாக்பூருக்கு உலக சமாதானம் வேண்டி பௌத்த கொள்கையை வலியுறுத்தி தென்னிந்திய பௌத்த கூட்டமைப்பு சார்பில் 12 அடி உயரமுள்ள அசோகர் சிலை உடன் ரத யாத்திரை நிகழ்ச்சி செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி திருச்சி, பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்தடைந்தது. அப்போது தென்னிந்திய புத்தர் கூட்டமைப்பு தலைவர் மவுரியாபுத்தா கூறுகையில்: உலக சமாதானம், புத்தரின் கொள்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்ட ரத யாத்திரை தமிழகம் வழியே ஆந்திரா, கர்நாடகா சென்று மகாராஷ்டிராவில் அக்டோபர் 10ஆம் தேதி நிறைவடைகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி