சேலம் மாவட்டம் ஆத்தூர்அரசு மருத்துவமனை எதிரில் சபரி அக்ரோ கேர் என்ற பெயரில் விவசாய பூச்சி மருந்து கடை நடத்தி வருபவர் சொக்கநாதபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (54). இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு மீண்டும் நேற்று கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப், உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு கடைப்பகுதியில் படுத்து இருப்பது போல் நோட்டமிட்டு கடையில் பூட்டை உள்ளே உடைத்து உள்ளே சென்றது தெரியவந்தது இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடை உரிமையாளர் வேல்முருகன் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.