சீமான் மீது ஆத்தூர் நகர, ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

67பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் வடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தந்தை பெரியார் குறித்து பேசியது கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன தமிழக முழுவதும் பெரியார் இயக்க ஆதரவாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பிச்சமணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி