சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டி நாகியம்பட்டி இடையே பெருமாள் மலை உள்ளது. மலையடிவாரப் பகுதியில் அப்பகுதியைச்சேர்ந்த சிலர் மண்வெட்டி கடத்தி வந்தனர். இதுகுறித்து வருவாய் துறையினருக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டரில் மண் வெட்டி கடத்திக் கொண்டிருந்த நபர்களை வருவாய்த்துறையினர் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (45), என்பவர் மண் அள்ளி விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும் டிராக்டர் ஓட்டுநர்கள் தீபக் (30) விமல் (39) என்பதும் தெரிய வந்தது வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்ய புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் தம்மம்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.