வாழப்பாடிமுன்னால்காதலியை காதலன்கழுத்துஅறுத்து கொலை முயற்சி

79பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் பகுதியில் சேர்ந்த கோவிந்தன் மகன் சின்ராஜ் என்பவருக்கும் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சேலம் கணவாய் காடு பகுதியைச் சேர்ந்த வேடராஜ்ன் என்பவருக்கும் வனிதாவுக்கும் திருமணத்திற்கு முன்பாகவே பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து வேடராஜ் வாழப்பாடிக்கு வனிதாவை பார்ப்பதற்காக இன்று வழக்கம்போல் வேடராஜ் வாழப்பாடிக்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகளுடன் வந்த வனிதாவை வேடராஜ் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது கோபமடைந்த வேடராஜ் வனிதாவை கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்தை சரமாரியாக அறுத்து தாணும் தனது கையை அறுத்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வேடராஜை துரத்தியுள்ளனர் காயம் அடைந்த வனிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாழப்பாடி போலீசார் வேடராஜை பிடித்து வாழப்பாடி மருத்துவமனையில் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி