முட்டல்ஏரியில் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் படகு சவாரி பயணம்

77பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் முட்டல் கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் ஏரி அமைந்துள்ளது. ஆனைவாரி நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளதால் ஏரி பகுதியில் வனத்துறை சார்பில் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு பராமரிப்பு பெற்று வருகிறது: இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அனைவரின் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து காணப்படும் நிலையில் ஏரி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மையத்திற்கும், ஏரியில் படகு சவாரி செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் ஏரி பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படகு சவாரி செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் பத்துக்கு மேற்பட்டோர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படகு சவாரி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. சம்பா விதம் மிகவும் முன்னரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி